ஏர்டெலில் வைபை காலிங் வசதி இந்தியாவில் ஆரம்பம் எப்படி செய்வது வாங்க பாப்போம்.

Updated on 10-Dec-2019
HIGHLIGHTS

ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும்

ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி வோ வைபை பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது புதிய வோ வைபை காலிங் சேவை வசதி கொண்ட சாதனங்களில் வாடிக்கையாளர்கள் அதிவேகமாக சீரான தரத்தில் கால்களை மேற்கொள்ள முடியும்.. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இந்த சேவையை  ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஆப்பிள் ஐபோன்களில் செட்டிங்ஸ் — மொபைல் டேட்டா — வைபை காலிங் ஆப்ஷன்களை எனேபிள் செய்ய வேண்டும்

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் க்விக் செட்டிங்ஸ் — வைபை காலிங் வசதியை ஆக்டிவேட் செய்யலாம்

சியோமி ஸ்மார்ட்போன்களில் செட்டிங்ஸ் — சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க்ஸ் — ஏர்டெல் — மேக் கால்ஸ் ஆன் வைபை ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும்

ஒன்பிளஸ் மாடல்களில் செட்டிங்ஸ் — மொபைல் நெட்வொர்க் — சிம் 1/2 — வைபை காலிங் வசதியை ஆக்டிவேட் செய்து ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்

ஏர்டெல் வைபை காலிங் வசதி தற்சமயம் டெல்லியில் மட்டும் துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் வைபை காலிங் வேலை செய்யும் சாதனங்கள்:

ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவை தற்சமயம் ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் எஸ்.இ., ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் , ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ, போகோ எஃப்1, ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ6, சாம்சங் கேலக்ஸி ஆன் 6, சாம்சங் கேலக்ஸி எம்30எஸ், சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் போன்ற மாடல்களில் மட்டும் வேலை செய்யும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :