ஏர்டெல் யின் இலவச வைபை காலிங் சேவையை எப்படி பெறுவது ?
ஏர்டெல் எக்ஸ்டிரீம் ஹோம் பிராட்பேண்ட் சேவையில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு இருந்தது.
ஏர்டெல் நிறுவனம் தனது வைபை காலிங் சேவையினை கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லியிலும் அதன்பின் தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மும்பை, கொல்கத்தா போன்ற பகுதிகளில் நீட்டிக்கப்பட்டது.
அந்த வகையில் தற்சமயம் ஏர்டெல் வைபை காலிங் சேவையினை வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கில் இணைந்திருந்தாலும் பயன்படுத்த முடியும். புதிய மாற்றம் பற்றிய அறிவிப்பு இதுவரை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்படவில்லை. இவற்றுடன் ஏர்டெல் வைபை காலிங் சேவையை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் எண்ணிக்கையையும் ஏர்டெல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஏர்டெல் வைபை காலிங் சேவை தற்சமயம் கேரளா, குஜராத், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சேவையினை ஏர்டெல் எக்ஸ்டிரீம் ஹோம் பிராட்பேண்ட் சேவையில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு இருந்தது.
ஏர்டெல் வைபை காலிங் சேவையை இயக்க எந்த செயலியும் தேவைப்படாது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் செட்டிங்கை மட்டும் மாற்றியமைத்தால் போதுமானது. இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
ஏர்டெல் யில் இலவச வைபை காலிங் எப்படி பயன்படுத்துவது.
- முதலில் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்திற்கு வைபை காலிங் சேவை வழங்கப்படுகிறதா என்பதை airtel.in/wifi-calling இணைய முகவரியில் சரிபார்க்க வேண்டும்
- பின் ஸ்மார்ட்போனின் இயங்குதளத்தை புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும்
- இனி ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் சென்று வைபை காலிங் வசதியை செயல்படுத்த வேண்டும்
- சீரான அனுபவத்திற்கு வோல்ட்இ சேவையை ஆன் செய்திருப்பது அவசியமாகும்
ஏர்டெல் வைபை காலிங் இந்த ஸ்மார்ட்போன்களில் நிச்சயமாக வேலை செய்யும்.:
ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவை தற்சமயம் ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் எஸ்.இ., ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் , ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ
சாம்சங் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எம்20, கேலக்ஸி ஜெ6, கேலக்ஸி ஆன் 6, கேலக்ஸி எம்30எஸ், கேலக்ஸி ஏ10எஸ், கேலக்ஸி ஏ50எஸ், கேலக்ஸி நோட் 9 போன்ற மாடல்களில் மட்டும் வேலை செய்கிறது.
போகோ எஃப்1, ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ, ரெட்மி 7ஏ, ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி வை3, ரெட்மி 7
ஒன்பிளஸ் 6, ஒன்பிளஸ் 6டி, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile