வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக் டைம் வழங்கும் வோடபோன் ஐடியா .

Updated on 01-Apr-2020

வோடபோன் ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17 வரை வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டியை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கிறது.

ஜீரோ பேலன்ஸ் டாக்டைம் கொண்ட அக்கவுண்ட்களுக்கு இலவச டாக்டைம் வழங்கப்படும் என அறிவித்து இருக்கின்றன. இத்துடன் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குகின்றன. 

இத்தனை வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து இன்கமிங் அழைப்புகள் வருவதோடு, ரூ. 10 இலவச டாக்டைம் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவன தகவல்களின் படி சுமார் எட்டு கோடி வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக்கு ஏற்ப டெலிகாம் நிறுவனங்கள் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச டாக்டைம் போன்ற சலுகைகளை அறிவித்து வருகின்றன. மொபைல் போன் போன்றே பிராட்பேண்ட் சேவைகளிலும் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை வாடிக்கையாளர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும் என ஏர்டெல் நிறுவம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :