ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.99 சலுகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த வகையில் ரூ.99 சலுகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.98 சலுகையில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
போட்டியை மேலும் கடுமையாக்க பிஎஸ்என்எல் நிறுவனமும் தன் பங்கிற்கு டேட்டா சுனாமி சலுகையில் தன் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை 26 நாட்களுக்கு வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட ஏர்டெல் சலுகை பயனர்களுக்கு வழங்கப்படுவதாக டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஜியோ வழங்கும் ரூ.98 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் வழங்கும் 2500-க்கும் அதிக எஸ்எம்எஸ்-களை விட அதிகம் ஆகும். அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங்-இல் ஏர்டெல் மற்றும் ஜியோ சார்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
ஏர்டெல் தவிர ஐடியா செல்லுலார் நிறுவனமும் ரூ.109 விலையில் புதிய சலுகையை சில வட்டாரங்களில் அறிவித்தது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.