ஜியோவை சரிக்கட்ட இதை தவிர இதை தவிர வேற வழி இல்லை என ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் சலுகையை மாற்றி உள்ளது
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.99 சலுகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த வகையில் ரூ.99 சலுகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.98 சலுகையில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 SMS 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
போட்டியை மேலும் கடுமையாக்க பிஎஸ்என்எல் நிறுவனமும் தன் பங்கிற்கு டேட்டா சுனாமி சலுகையில் தன் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை 26 நாட்களுக்கு வழங்குகிறது.
அப்டேட் செய்யப்பட ஏர்டெல் சலுகை பயனர்களுக்கு வழங்கப்படுவதாக டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்கள் , தினமும் 100 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஜியோ வழங்கும் ரூ.98 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 SMS வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் வழங்கும் 2500-க்கும் அதிக SMS -களை விட அதிகம் ஆகும். அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங்-இல் ஏர்டெல் மற்றும் ஜியோ சார்பில் எவ்வித லிமிட் விதிக்கப்படவில்லை.
ஏர்டெல் தவிர ஐடியா செல்லுலார் நிறுவனமும் ரூ.109 விலையில் புதிய சலுகையை சில வட்டாரங்களில் அறிவித்தது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்