ரிலையன்ஸ் ஜியோவை அடுத்து Airtel இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆபரேட்டராக இருக்கிறது இது Netflix யின் OTT (over-the-top) நன்மையுடன் புதிய ப்ரீ பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, ஏர்டெல்லின் முதல் மற்றும் தற்போதுள்ள ஒரே திட்டமாகும், இதில் நெட்ஃபிக்ஸ் இலவச சந்தா கிடைக்கிறது. ஏர்டெல்லின் இந்த திட்டம் அனைத்து இந்திய பயனர்களுக்கும் கிடைக்கிறது. இந்த திட்டம் medium-term validity மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிறைய டேட்டாவை வழங்குகிறது. இப்போது நேரத்தை வீணடிக்காமல், இந்த திட்டம் பயனர்களுக்கு எவ்வாறு பலன்களை வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
பார்தி ஏர்டெல்லின் ரூ.1499 திட்டம் இந்த டெலிகாம் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் ஒரு புதிய கூடுதலாகும். இந்த திட்டம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்தச் சலுகை இன்டர்நெட்டில் மொபைல் ஆப்ஸிலும் அமைதியாகச் சேர்க்கப்பட்டது, இப்போது ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் அடிப்படை நன்மை பற்றி பேசினால் இதில் தினமும் 3GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS அடங்கியுள்ளது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இது 84 நாட்கள் இருக்கிறது மேலும் இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் Netflix (அடிப்படை), அன்லிமிடெட் 5G டேட்டா, Apollo 24|7 Circle, இலவச HelloTunes மற்றும் Wynk Music ஆகியவற்றுக்கான இலவச சந்தா ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க : Redmi 13C 50MP கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும்
Netflix இந்த நன்மையை பெற ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பிற்கு சென்று அன்லிமிடெட் 5Gடேட்டா நன்மையை நீங்கள் இந்த பலனை பெறலாம் ‘Discover Thanks Benefit’ பக்கத்தைப் பார்வையிடுவதன் மூலம் Netflix நன்மையைப் பெறுவீர்கள், . நீங்கள் க்ளைம் பட்டனைத் தட்டி, பிறகு ‘தொடரவும்’ என்பதைத் தட்டவும். இதற்குப் பிறகு உங்கள் Netflix சந்தா செயல்படுத்தப்படும்.