ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய ரூ.9 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.9 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட்ட உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் அழைப்புகள் உள்ளிட்டவை ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. கூடுதலாக 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 100 எம்.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய ரூ.9 திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19 திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது.
ஜியோவின் ரூ.19 திட்டத்தில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 20 எஸ்.எம்.எஸ். மற்றும் 150 எம்.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது ஏர்டெல் ரூ.9 திட்டம் சிறப்பானதாக இருக்கிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.23 திட்டத்தில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 200 MB டேட்டா, 100 SMS. உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய ஏர்டெல் திட்டத்தை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். புதிய சலுகை ஏர்டெல் காம்போ ஆஃபர் பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஏர்டெல் ரூ.9 சலுகை குறைந்த சேவையை ஒரு நாள் மட்டும் பயன்படுத்த விரும்புவோருக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
அதிக சலுகைகளை விரும்புவோருக்கு ஏற்ப ஏர்டெல் தனது ரூ.93 திட்டத்தை சமீபத்தில் மாற்றியமைத்தது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 GB 4G/3G டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
கூடுதலாக ஏர்டெல் ரூ.149 திட்டத்தில் தினமும் 1 GB 4G/3G டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது