Airtel யின் புதிய திட்டம் அறிமுகம் 30 நாட்களுக்கு நோ டென்ஷன்

Updated on 26-Sep-2024
HIGHLIGHTS

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய நிறுவனமாகும்

Airtel தற்பொழுது புதிய டேட்டா பேக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது,

இந்த திட்டங்களின் விலை ரூ.161, ரூ.181 மற்றும் ரூ.361 ஆகும்.

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய நிறுவனமாகும் இந்த திட்டம் July 2024 அதன் டேரிஃப் திட்டத்தின் விலையை உயர்த்தியது மேலும் இது ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டத்தை கொண்டு வருகிறது அந்த வகையில் Airtel தற்பொழுது புதிய டேட்டா பேக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டங்களின் விலை ரூ.161, ரூ.181 மற்றும் ரூ.361 ஆகும். இந்தத் திட்டங்கள் சேவை வேலிடிட்டியாகும் டேட்டா வவுச்சர்களாகும். இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல்லின் டேட்டா திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும்

Airtel-New-Data-Plans.png

Airtel யின் ரூ,121 டேட்டா பேக்

Airtel யின் ரூ,121 டேட்டா பேக் திட்டத்தில் 6GB யின் டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, கூடுதல் ஆப்யிர்க்கு ஒரு எம்பிக்கு 50பைசா வசூலிக்கப்படும். தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்வதன் மூலம், பயனர்கள் கூடுதலாக 2ஜிபியைப் பெறலாம், மொத்தத் தொகையை 8ஜிபியாகக் கொண்டு வரலாம்.

Airtel யின் ரூ,149 டேட்டா திட்டம்.

ஏர்டெல் யின் ரூ,149 டேட்டா பேக் திட்டத்தில் OTT நன்மைகளும் வருகிறது, மேலும் இது 1GB யின் டேட்டா இது அடிப்படை திட்டத்துடன் வருகிறது கூடுதலாக இதில் Airtel Xstream Play Premium சேவையுடன் இதில் 22 OTT பிளாட்பாரம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது

Airtel யின் ரூ,161 டேட்டா பேக் திட்டம்.

இந்த திட்டம் தினசரி லிமிட் இல்லாமல் 30 நாட்களுக்கு 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது பயனர்களுக்கு ஒரு ஜிபிக்கு ரூ.13 ரேஞ்சில் வரும் . இதன் டேட்டா லிமிட் மீறினால் 50p Mb க்கு வசூலிக்கப்படும்.

Airtel யின் ரூ,181 டேட்டா பேக் திட்டம்.

இதேபோல், ரூ.181 ஏர்டெல் திட்டமானது தினசரி வரம்பு இல்லாமல் 15ஜிபி டேட்டாவுடன் வருகிறது, இது பயனர்களுக்கு ஒரு ஜிபிக்கு சராசரியாக ரூ.12 செலவாகும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்தின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது, இதில் Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, SunNxt மற்றும் பிற போன்ற 22 க்கும் மேற்பட்ட OTTகளுக்கான அக்சஸ் அடங்கும்.

Airtel யின் ரூ,211 டேட்டா பேக் திட்டம்.

Airtel யின் ரூ,211 டேட்டா பேக் திட்டம் (முன்பு 181 ஆக இருந்தது) இதில் தினமும் 1GB யின் டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது கூடுதலாக டேட்டா 50p per MB ஆக குறைக்கப்படும் இதில் இதை தவிர வேறு எந்த நன்மையும் வழங்காது

ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

Airtel யின் ரூ,361 டேட்டா பேக் திட்டம்.

கடைசியாக ரூ. 361 திட்டம் வருகிறது, இதில் தினசரி லிமிட் இல்லாமல் 30 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டா உள்ளது, மேலும் இது பயனர்களுக்கு ஒரு ஜிபிக்கு ரூ.7 செலவாகும். மேலும் இதன் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு 50p per MBக்கு வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க:Airtel ஸ்பேம் கால் பிரச்சனையை தீர்க்க AI-Powered நெட்வர்க் வசதியை கொண்டு வந்துள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :