ஏர்டெல் பயனர்களை சந்தோஷ படுத்த ஏர்டெலின் அசத்தல் ஆபர்…!
பாரதி ஏர்டெல் நிறுவனம் #airtelthanks மூலம் தனது பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் மாதம் ரூ.100-க்கும் அதிக பணம் செலுத்தும் பயனர்களுக்கு கூடுதல் சலுகை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும் என பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. அந்த வகையில் யனர்களுக்கு பிரீமியம் டிஜிட்டல் டேட்டாக்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது
மேலும் ஏர்டெல் நிறுவனம் பிளிப்கார்ட் வெப்சைட்டுடன் சேர்ந்து ரூ.4,500 மதிப்புள்ள சலுகைகள், 100 ஜி.பி. போனஸ் டேட்டா உள்ளிட்டவற்றை பிளிப்கார்ட் பிரத்யேக ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற சலுகைகளுடன், ஏர்டெல் நிறுவன இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட திட்டங்களை தேர்வு செய்வோருக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
நெட்ஃபிளிக்ஸ் சந்தாவினை ஏர்டெல் டி.வி. ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலமாகவும் பெற முடியும். இத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஜீ5 டேட்டாக்களை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும்
ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. விரைவில் #airtelthanks சலுகை வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என ஏர்டெல் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile