Airtel யின் இந்த மூன்று திட்டத்தில் கிடைக்கும் Disney+ Hotstar சபஸ்க்ரிபிஷன்.

Updated on 23-Jan-2023
HIGHLIGHTS

.Airtel சம்பத்தில் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது

நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சந்தாவைப் பெறும் சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது

TelecomTalk தான் புதிய அப்டேட் பற்றி முதலில் தெரிவித்தது. இந்தப் புதிய திட்டங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்...

நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்தால், மற்றும் Disney+ Hotstar ஷாப்கறிபிசன் இலவசமாக பெற விரும்பினால், உங்களுக்கு மிக சந்தோசமான செய்தி.Airtel  சம்பத்தில் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதை பற்றி ஒரு சிலருக்கே தெரிய வாய்ப்புள்ளது. நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சந்தாவைப் பெறும் சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ஏர்டெல்லின் ரூ.499 மற்றும் ரூ.3,359 திட்டங்களுடன் கிடைத்தது, ஆனால் இப்போது நிறுவனம் மேலும் இரண்டு புதிய திட்டங்களைச் சேர்த்துள்ளது. TelecomTalk தான் புதிய அப்டேட் பற்றி முதலில் தெரிவித்தது. இந்தப் புதிய திட்டங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்…

Airtel யின் 719 ரூபாய்  779 ரூபாய் மற்றும் 999 ரூபாய் கொண்ட திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.719 ப்ரீ-பெய்டு திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS உடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு Disney + Hotstar மொபைல் சந்தா கிடைக்கும். இது தவிர, Airtel Xstream செயலி, RewardsMini சந்தா, அப்பல்லோ 24|7 வட்டம், இலவச Hellotune மற்றும் ரூ.100 கேஷ்பேக் ஆகியவற்றை FASTagல் அணுகலாம்.

ஏர்டெல்லின் 779  ரூபாய் கொண்ட திட்டத்தில் தினமும் 1.5GBடேட்டாவுடன் கிடைக்கும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மை கிடைக்கும். இது தவிர தினமும் 100 SMS 90 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும்  மேலும் இந்த திட்டத்தில் 3 மாதங்கள் வரை Disney+ Hotstar  சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கும்.

இப்போது ரூ. 999 இன் கடைசித் திட்டத்தைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தில், 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு இந்த திட்டத்தில் Disney + Hotstar மொபைல் சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தில் Amazon Prime சந்தாவும் கிடைக்கிறது. இப்போது மொத்தம், ஏர்டெல் மொத்தம் ஏழு திட்டங்களைக் கொண்டுள்ளது, இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தா கிடைக்கிறது. இந்த திட்டங்கள் ரூ.399, ரூ.499, ரூ.719, ரூ.779, ரூ.839, ரூ.999 மற்றும் ரூ.3,359 ஆகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :