ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு இலவச அட்வான்ஸ் டாக்டைம் கிரெடிட், 1 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் கேரளாவில் உள்ள பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் புதிய அறிவிப்பு கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கித்தவிக்கும் கேரள பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் இலவச wifi மற்றும் கால்களை வழங்க ஏதுவாக கேரளாவில் ஐந்து முக்கிய இடங்களில் VSAT (மிகச்சிறிய அப்ரேச்சர் டெர்மினல்) மையங்களை செட்டப் செய்ய திட்டமிட்டுள்ளது.
– ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 வரை டாக்டைம் கிரெடிட் முறையில் பெறும் வசதி
– அனைத்து ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா (ஏழு நாட்கள் வேலிடிட்டி)
– ஏர்டெல் போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்கள் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம்
– மக்களுக்கு இலவச வைபை மற்றும் வாய்ஸ் கால் வழங்க ஐந்து ஏர்டெல் சிறிய அப்ரேச்சர் போர்ட் அமைக்கப்படுகிறது
– மின் இணைப்பு சீரற்ற பகுதிகளிலும் ஏர்டெல் சேவை தொடர்ந்து கிடைக்க நெட்வொர்க் குழுவினர் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் திர்ச்சூர், கோழிக்கோடு, மல்லப்புரம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏர்டெல் ஃபிளாக்ஷிப் மையங்களில் மக்கள் தங்களது மொபைல் போன்களை சார்ஜ் செய்து, இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்