ஏர்டெல் பயனர்களுக்கு இலவச நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு..!
ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட், வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சபஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட், வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சபஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன் பின் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது ஹோம் பிராட்பேன்ட் சேவக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இலவச சேவை வழங்கப்படுகிறது.
இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படாத பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை ஏர்டெல் செயலிகள் மூலம் சைன்-இன் செய்து தங்களது சந்தாவுக்கான கட்டணத்தை ஏர்டெல் கட்டணத்துடன் இணைத்து செலுத்த முடியும். இலவச சேவை வழங்கப்பட்டுள்ள பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு தைன்-அப் செய்து மூன்று மாத சேவையை ஏர்டெல் டிவி ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.
புதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்களுக்கு வரும் வாரங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் டேட்டாக்களை விளம்பரப்படுத்தி ஏர்டெல் டிவி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் டேட்டாக்களை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில் ஏர்டெல் டிவி ஆப்யில் நெட்ஃப்ளிக்ஸ் டேட்டாக்களை பிரத்யேகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile