ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏர்டெல் சேவையை பயன்படுத்த புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்வோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
வெற்றிகரமாக நெட்வொர்க் மாறியதும், புதிய ஏர்டெல் வாடிக்கையாளருக்கும் இதே பலன்கள்: ரூ.50 மதிப்புள்ள மூன்று தள்ளுபடி கூப்பன்கள் கிடைக்கும். இந்த கூப்பன்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் லின்க் செய்திருக்கும் மை ஏர்டெல் செயலியில் தானாக கிரெடிட் செய்யப்பட்டு விடும். இதனை போஸ்ட்பெயிட் கட்டணம் செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்
ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போஸ்ட்பெயிட் பயனர்களை ஏர்டெல் சேவையில் சேர்த்து விடும் போது குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளரின் மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.150 மதிப்புள்ள தள்ளபடி கூப்பன்களை பெற முடியும்.
புதிய ஏர்டெல் இணைப்பு வெற்றிகரமாக ஆக்டிவேட் ஆனதும், பரிந்துரை செய்தவருக்கும் புதிய இணைப்பை பெற்றவருக்கும் 24 மணி நேரத்தில் தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகையை அதிகபட்சம் பத்து முறை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் ரூ.1,500 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். செயலியில் உள்ள மை ஏர்டெல் ஆப் சென்று ஏர்டெல் போஸ்ட்பெயிட் ரெஃபரல் (postpaid referral) சலுகையை பெற முடியும். சலுகையில் இணைய செயலியில் லாக்-இன் செய்து நோட்டிஃபிகேஷன் பகுதியில் காணப்படும் “Rs. 150 discount on your postpaid bill” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் பிரீபெயிட், ஏர்டெல் பிராட்பேன்ட், ஏர்டெல் கார்ப்பரேட் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த குறியீட்டை (ரெஃபரல் லின்க்) காப்பி செய்து, சோசியல் வெப்சைட் பட்டன்கள் மூலம் பகிர்ந்து கொண்டோ அல்லது தானாகவோ சிலரை பரிந்துரை செய்யலாம். நீங்கள் அனுப்பும் லின்க்கை உங்களது நண்பர் கிளிக் செய்து அனைத்து வழிமுறைகளையும் பூர்த்தி செய்து, வெற்றிகரமாக ஏர்டெல் சேவையில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கும், புதிதாய் ஏர்டெல் சேவையில் இணைந்த நண்பருக்கும் தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.