ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் ரூ. 399 விலை சலுகையை செலக்ட் செய்வோருக்கு தற்சமயம் வழக்கத்தை விட கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் ஏற்கனவே தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஏர்டெல் டி.வி. பிரீமியம், விண்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இருப்பினும் . கூடுதல் பலன்கள் செலக்ட் செய்யப்பட்டோருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ரூ. 399 சலுகையில் சிலருக்கு 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தினசரி வழங்கப்படும் 1 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் வாடிக்கையாளர் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 கேஷ்பேக், ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு திட்டத்திற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் இந்த சலுகையில் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.
சில வாடிக்கையாளர்களுக்கு 400 எம்.பி. டேட்டா மட்டுமே கூடுதலாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ஏர்டெல் தேங்ஸ் திட்டத்தில் பயனர்களுக்கு பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின் மூலம் அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ5 போன்ற சேவைகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.