ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேட்டா பயனர்கள் விசேஷ சலுகைகளை தேர்வு செய்யும் போது வழக்கத்தை விட அதிக டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இலவச டேட்டா பற்றிய தகவல் பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இலவச டேட்டா அனைவருக்கும் வழங்கப்படாமல், தேர்வு செய்யப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது
கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் குறுந்தகவல் மூலம் தெரிவித்து இருக்கிறது. மேலும் 1 ஜிபி இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டது என்றும் இது சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா வழங்கியது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு இலவச டேட்டா வழங்கியது.
Airtel யின் அதிக ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.