ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் போட்டி நிறைவுற்றதாக தெரியவில்லை. பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனமும் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது.
ஏர்டெல் ரூ.399 சலைகையை ரீசார்ஜ் செய்வோருக்கு அந்நிறுவனம் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. அந்த வகையில், பயனர்கள் செலுத்தும் தொகையை அப்படியே கேஷ்பேக் வடிவில் திரும்ப பெற முடியும். ஏர்டெல் வழங்கும் 100 சதவிகிதம் கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள எட்டு வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.
இந்த வவுச்சர்களை பயனர்கள் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது ஒவ்வொன்றாக பயன்படுத்த முடியும். அப்படியெனில், ஒரு முறை ரீசார்ஜ் செய்ய ரூ.50 மதிப்புள்ள ஒரு வவுச்சரையே பயன்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு முறை ரூ.399 ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.50 மட்டும் குறைக்கப்படும்.
கேஷ்பேக் வவுச்சர்களை எட்டு முறை பயன்படுத்த முடியும் என்பதால் பயனர்கள் மொத்தம் ரூ.400 கேஷ்பேக் பெற முடியும். ஏர்டெல் அறிவித்திருக்கும் சலுகை மார்ச் 31, 2020 வரை வழங்கப்படுகிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர் பரிந்துரையின் பேரில் வெற்றிகரமாக நெட்வொர்க் மாறியதும், புதிய ஏர்டெல் வாடிக்கையாளருக்கும் இதே பலன்கள்: ரூ.50 மதிப்புள்ள மூன்று தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1,500 மதிப்புள்ள சலுகையை அந்நிறுவனம் அறிவித்தது. ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போஸ்ட்பெயிட் பயனர்களை ஏர்டெல் சேவையில் சேர்த்து விடும் போது குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளரின் மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.150 மதிப்புள்ள தள்ளபடி கூப்பன்களை பெற முடியும்.