ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த புதிய சலுகையில் புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 வரை இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவித்துள்ளது .
ஏர்டெல் வழங்கும் இந்த கேஷ்பேக் தொகை வாடிக்கையாளரின் மைஏர்டெல் அக்கவுன்ட்டில் ரூ.50 மதிப்பு கொண்ட 40 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. கேஷ்பேக் மற்றும் கூடுதல் டேட்டா வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மொபைல் போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.
இந்த டிஜிட்டல் கூப்பன்களை செலக்ட் செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனர்கள் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளையும் போஸ்ட்பெயிட் பயனர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது டிஜிட்டல் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சலுகையை பெறுவது எப்படி?
ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வாங்க வேண்டும்
அக்டோபர் 31ம் தேதிக்குள் புதிய 4ஜி ஸ்மாரட்போனி்ல் 4ஜி சிம்கார்டினை செருக வேண்டும்
மைஏர்டெவ் ஆப் மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் போது கேஷ்பேக் கூப்பன்கள் தானாக சேர்க்கப்படும்
டிஜிட்டல் கூப்பன்கள் வாடிக்கையைளருக்கு வழங்கியதில் இருந்து 40 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது
ஒரு சமயத்தில் ஒரே கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும்
முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டினை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கியது. கடந்த வாரம் ஏர்டெல் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது.