ஏர்டெல் இனி வழங்கும் Rs,.249க்கு 2 ஜிபி டேட்டா

ஏர்டெல் இனி வழங்கும் Rs,.249க்கு 2 ஜிபி டேட்டா
HIGHLIGHTS

பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை போட்டி நாளுக்கு நாள் புதிய சலுகைகள் வெளியாக காரணமாக அமைந்துள்ளன. இம்முறை ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.249 விலையில் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங்கின் போது இலவச இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ அறிவித்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ சலுகையின் விலை ரூ.51 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதே சலுகைகளுக்கு போட்டியாக வோடபோன் ரூ.199 விலையில் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய சலுகை மட்டுமின்றி ஏற்கனவே ஏர்டெல் வழங்கி வரும் ரூ.349 சலுகையின் பலன்களை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட சலுகையில் இம்முறை 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 விலையில் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு நொடிக்கு 300 எம்பி-க்கும் அதிக வேகத்தில் ஹோம் பிராட்பேண்ட் சேவையை அறிவித்தது. FTTH சார்ந்த சேவையின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகையில் பயனர்கள் Rs,2199 செலுத்தி 1200 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo