Airtel அறிமுகப்படுத்தியயுள்ளது முற்றிலும் இலவச 5G டேட்டா. அனைவரும் பெறலாம்.அது எப்படி?

Updated on 17-Mar-2023
HIGHLIGHTS

ஏர்டெல் அதன் பயனர்களுக்கு புதிய இலவசமாக அன்லிமிடெட் 5G டேட்டா அறிமுகமப்படுத்தியுள்ளது.

இந்த ஆபர் ஏரடெலின் பரீபெயிட் மற்றும் போஸ்டபெயிட கஷ்டமார் இருவருக்குமே பொருந்தும்.

ஏர்டெல் 5G ப்ளஸ் சேவை இப்பொழுது இந்தியாவில் 270 நகரங்களில் கிடைக்கிறது

ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு புதிய அலிமிடெட் 5G டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள அனைத்து திட்டங்களிலும் டேட்டா பயன்பாடு மீதான லிமிட்களை நீக்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. எளிமையான வகையில், இப்போது 5G டேட்டா உபயோகத்திற்கு லிமிட் இல்லை, மேலும் இந்தச் சலுகை ரூ.239 மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் கிடைக்கும். 

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

ஏர்டெல் 5G ப்ளஸ் சேவை இப்பொழுது இந்தியாவில் 270 நகரங்களில் கிடைக்கிறது, இருப்பினும், இந்தியாவில் 365 நகரங்களில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் கூறுவதால், ரிலையன்ஸ் ஜியோவை விட இது மிகவும் பின்தங்கி உள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜியை வழங்குவதாக ஜியோ உறுதியளித்தது. மறுபுறம் ஏர்டெல், மார்ச் 2024க்குள் அனைத்து நகரங்களிலும் வெளியிடுவதாக அறிவித்தது.

ஏர்டெலின் இலவச 5G  டேட்டாவை எப்படி பெறுவது?

ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.

"எங்கள் வாடிக்கையாளர்களை சிறந்த தரமான மற்றும் சேவைகளால் மகிழ்விப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்த அறிமுகச் சலுகையானது, எங்கள் வாடிக்கையாளர்கள் டேட்டா லிமிட்களை பற்றி கவலைப்படாமல் அனல் பறக்கும் வேகத்தில் சர்ஃப், ஸ்ட்ரீம், சேட் மற்றும் பல நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் உலகத் தரம் வாய்ந்த ஏர்டெல் 5ஜி பிளஸின் ஆற்றலை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று பார்தி ஏர்டெல்லின் நுகர்வோர் வணிக இயக்குநர் ஷஷ்வத் சர்மா கூறினார்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :