பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.289 விலையில் புது சலுகையை அறிவித்துள்ளது. 48 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புது சலுகை அதிகளவு வாய்ஸ் மேற்கொள்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் அறிவித்திருக்கும் புது சலுகை வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.
ஏர்டெல் ரூ.289 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (லோக்கல் , STD மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாய்ஸ் கால் மேற்கொள்ள பயனர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வாய்ஸ் கால் சலுகையுடன் பயனர்களுக்கு 1 ஜி.பி. மொபைல் டேட்டா, தினமும் 100 SMS. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்த சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரூ.279 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா, தினமும் 100 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதேபோன்று ஐடியா செல்லுலார் வழங்கும் ரூ.295 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 5 ஜி.பி. மொபைல் டேட்டா, தினமும் 100 SMS. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஐடியா பிரீபெயிட் சலுகையில் அதிகளவு மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது என்றாலும், பெருமளவு வாய்ஸ் கால் மேற்கொள்வோர் எனில், ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை பயனுள்ளதாக இருக்கும். ஐடியா சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது என்றாலும், இதில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.