Airtel Rs,199 VS Jio Rs 289 plan:குறைந்த விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி, விலையில் என்ன வித்தியாசம்?

Updated on 22-Jun-2023
HIGHLIGHTS

ஏர்டெல் உங்கள் அதிருப்தியை நீக்கியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 35 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் வழங்கும் 289 ருபாய் மற்றும் 199ருபாய் கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்

குறைந்த வேலிடிட்டியாகும் திட்டம் தொடர்பாக நீங்கள் டெலிகாம் நிறுவனங்களின் மீது கோபமாக இருந்தால், ஏர்டெல் உங்கள் அதிருப்தியை நீக்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 35 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டம் பற்றிய தகவலை டெலிகாம் டாக் முதலில் அளித்துள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் காலிங் கிடைக்கும். ஏர்டெல் வழங்கும் முதல் ப்ரீபெய்டு திட்டம் 35 நாட்கள் வேலிடிட்டியாகும்;.மேலும் ஏர்டெல் வழங்கும் 289 ருபாய் மற்றும் 199ருபாய் கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்  அதன் பலன்களை தெரிந்து கொள்வோம்…

Airtel  யின் 289 ருபாய் கொண்ட திட்டம்

குறிப்பாக குறைந்த விலையில் நீண்ட கால வேலிடிட்டியை விரும்புபவர்களுக்காக ஏர்டெல் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை 289 ரூபாயாக வைக்கப்பட்டுட்டள்ளது. ஏர்டெல்லின் இந்த ரூ.289 திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங் அனைத்து நெட்வொர்க்குகளிலும் கிடைக்கிறது ஆனால் இதில் 4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இது தவிர, Apollo 24|7 Circle சந்தா, இலவச Hello Tune மற்றும் Wynk Music ஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Airtel யின்199 ரூபாய் கொண்ட திட்டம்.

நீண்ட வேலிடிட்டியாகும் மற்றொரு திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஏர்டெல்லும் ரூ.199க்கான திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது தவிர, ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், மொத்தம் 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களுடன் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

இந்த இரண்டு திட்டத்தில் இருக்கும் வித்தியாசம் என்ன?

இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி தன்மையில் ஐந்து நாட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது, ஆனால் இது தவிர மற்றொரு பெரிய வித்தியாசம் உள்ளது. ஏர்டெல்லின் ரூ.289 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும், ரூ.199 திட்டத்தில் இது கிடைக்காது. ஏர்டெல் ரூ. 239 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :