ஏர்டெல் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் கீழ் ஒரே பிளானில் டாக்டைம் 4G/3G டேட்டா மற்றும் டெரிப் பெனிபிட் கிடைக்கிறது. இந்த பேக் யின் சிறைப்பு விஷயம் என்னவென்றால் நீங்கள் இதில் அதிக பணம் செலவிட தேவை இல்லை இந்த புதிய ரீசார்ஜ் ரீசார்ஜ் ஆய்வு மற்றும் வாடிக்கையாளர் பின்னூட்டங்களுக்கு பிறகு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் 35, 65 மற்றும் 95 ரூபாய்களின் ரீசார்ஜ் அடங்கும்.
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகையில் டேட்டா, டாக்டைம், மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு, அதிக ஆய்வுக்குப் பின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகைகளில் பயனர்கள் டாக்டைம், டேட்டா உள்ளிட்டவை ஒரே சலுகையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வெவ்வேறு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. டாக்டைம் உடன் வெவ்வேறு வேலிடிட்டி வழங்கும் சலுகைகளின் விலை ரூ.35, ரூ.65 மற்றும் ரூ.95 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.35 விலையில் கிடைக்கும் ஏர்டெல் சலுகையில் பயனர்களுக்கு ரூ.26.66 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 100 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதேபோன்று ரூ.65 விலையில் கிடைக்கும் சலுகையில் ரூ.65 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 200 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.95 சலுகையில் ரூ.95 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா, 500 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக தமிழ் நாடு, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகள் விரைவில் நாடு முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஏர்டெல் அறிவித்த ரூ.449 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என 70 நாட்களுக்கு மொத்தம் 140 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது