Reliance Jio வின் சில காலத்திற்கு முன்பு அதன் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டம்) அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் உடன் நேரடியாக போட்டியிடும் புதிய திட்டத்தின் விலை ரூ.749 ஆகும். உண்மையில், ஏர்டெல் ஏற்கனவே 90 நாட்கள் வேலிடிட்டியாகும் திட்டத்தைக் கொண்டுள்ளது, இது ஜியோவின் திட்டத்தை விட ரூ. 30 அதிகம் அதாவது ரூ.779. இரண்டு திட்டங்களும் ஒரே வேலிடிட்டியுடன் வருகின்றன. ஆனால், நன்மைகளின் அடிப்படையில், ஜியோவின் ரூ.749 திட்டம் ஏர்டெல்லின் ரூ.779 திட்டத்தை விட சிறப்பாக உள்ளது. இந்த இரண்டு திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது?
ஜியோவின் 749 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் கால் நன்மை வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, அதாவது இந்த திட்டத்தில் ஆகமொத்தம் 180 GB டேட்டா வழங்குகிறது, டேட்டா லிமிட் முடிந்த பிறகு இன்டர்நெட் ஸ்பீட் 64kbps ஆக குறைக்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் வழங்கும் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது, அதாவது மொத்தம் 135 ஜிபி டேட்டா.வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது,
ஏர்டெலை விட ஜியோவின் இந்த திட்டத்தில் 30 ரூபாய் குறைந்துள்ளது இருப்பினும் இதில் ஏர்டேலை விட அதுக டேட்டா நன்மை வழங்குகிறது, ஆனால் இந்திரா திட்டத்தின் வேலிடிட்டி அதே 90 நாட்களுக்கு இருகிறது, இருப்பினும் ஜியோவை விட 30ரூபாய் கூடுதலாக இருந்தபோதிலும் ஏர்டெலால் அதிக நன்மை வழங்க முடியவில்லை எனவே 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த இரு திட்டத்தில் ஜியோவே வெற்றிபெற்றது.