டெலிகாம் நிறுவனங்களில் பல போட்டிகள் நடை பெற்று வந்து கொண்டே தான் இருக்கிறது அந்த வகையில், ஜியோ ஏர்டெல் வோடபோன் நிறுவங்கள் தொடர்ந்து பல சலுகையை அறிவித்து வருகிறது அதனை தொடர்ந்து ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல சலுகையை அறிவித்துள்ளது மேலும் இந்த திட்டமானது Rs 500ரூபாய்க்குள் இருக்கும் திட்டங்களில் செல்லுபடியாக இருக்கும்.
அதனை தொடர்ந்து இந்த திட்டமானது Rs 399, Rs 448 மற்றும் Rs 499 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் நன்மை வழங்கப்படம்.இதனுடன் இந்த மேம்பாட்டின் கீழ் கூடுதலாக 400MB லிருந்து அதிகரிக்கப்பட்டு GB யில் மாற்றப்பட்டது
அந்த வகையில் ஆரம்ப விலை Rs 399 யில் இருக்கிறது முன்பு இந்த திட்டத்தின் கீழ் தினமும் 1GB டேட்டா வழங்கப்பட்டது, ஆனால் இப்பொழுது 1.4GB. டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் பயனர்களுக்கு அன்லிமிட்டட் கால்கள் மற்றும் தினமும் 100 மெசேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் ஏர்டெல் பிரிமியம் டிவி ஒரு வருட சந்தா Norton Mobile Security மற்றும் Wynk போன்ற நன்மைகளையும் இதில் வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசினால், 84 நாட்களுக்கு இருக்கிறது.
இதன் இரண்டாவது திட்டம் 449 ருபாய் உடன் இதில் மொத்த டேட்டா தினமும் 1.9GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில்; முன்பு வெறும் 1.5GB டேட்டா தான் வழங்கப்பட்டது. இதனுடன் இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது மேலும் இதன் வேலிடிட்டி பற்றி பேசினால், 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது இதனுடன் இதில் இலவச ஏர்டெல் பிரிமியம் சந்தா Norton Mobile Security மற்றும் Wynk. போன்றவை கிடைக்கிறது.
மூன்றாவதாக இந்த திட்டத்தில் Rs 499யின் இந்த திட்டத்துடன் 2.4GB டேட்டா தினமும் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் கீழ் முதலில் தினமும் 2GB டேட்டா வழங்கப்பட்டது. இதனுடன் இந்த திட்டத்தில் 82 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிட்டட் கால்கள் மற்றும் 100 SMS வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் டிவி பிரிமியம் Norton Mobile Security மற்றும் Wynk.போன்றவை வழங்கப்படுகிறது.