ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 129 மற்றும் ரூ. 199 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளை இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த இரு சலுகைகளும் மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் தற்சமயம் இந்தியா முழுக்க ஏர்டெல் பயனர்கள் எந்த வட்டாரத்தில் இருந்தாலும் இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இரு சலுகைகளிலும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. இவற்றில் அதிவேக டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த சலுகைகள் 16 வட்டாரங்களில் நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் ஏர்டெல் ரூ. 129 மற்றும் ரூ. 199 சலுகைகள் புதிய அறிவிப்பின் படி இந்தியா முழுக்க ஏர்டெல் சேவை வழங்கப்படும் 2 வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 129 சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 199 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டியும் 24 நாட்கள் ஆகும்.
தற்போதைய அறிவிப்பு வெளியாகும் முன் இரு சலுகைகளும் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, சென்னை, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்படாமல் இருந்தது.