Airtel யின் என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் எது பெஸ்ட்

Airtel யின் என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் எது பெஸ்ட்
HIGHLIGHTS

இந்திய தனியார் டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையை ஜூலை 3 அதிகரித்தது

ஆகஸ்ட் 2024 இல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிரிவுகளில் வழங்கப்படும்

ஏர்டெல்லின் என்ட்ரி-லெவல் திட்டங்களில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்.

இந்திய தனியார் டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையை ஜூலை 3 அதிகரித்தது இந்த மாற்றத்திற்குப் பிறகு, கஸ்டமர்கள் டெலிகாம் சேவைகளை அனுபவிக்க விரும்பினால், அவர்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலும், என்ட்ரி லெவல் ரீசார்ஜ்களுக்கும் கூட அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 2024 இல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிரிவுகளில் வழங்கப்படும் ஏர்டெல்லின் என்ட்ரி-லெவல் திட்டங்களைப் பார்ப்போம்.

Airtel யின் என்ட்ரி-லெவல் ப்ரீபெய்ட் திட்டம்.

நீங்கள் ஏர்டெல் கஸ்டமராக் இருந்து, ரீசார்ஜ் திட்டங்களுக்கு குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை பெற விரும்பினால் , இந்த நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ட்ரூலி அன்லிமிடெட் திட்டம் இப்போது ரூ.199க்கு வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இங்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, ஒரு எம்பி டேட்டா பயன்பாட்டிற்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் Wynk Music மற்றும் இலவச HelloTunes உட்பட வெகுமதி பலன்களையும் Airtel வழங்குகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு ட்யூனை கூடுதல் கட்டணமின்றி அமைக்க அனுமதிக்கிறது.

Airtel அடிப்படை போஸ்ட்பெய்ட் திட்டம்.

ஏர்டெல்லின் அடிப்படை போஸ்ட்பெய்ட் திட்டம் ரீடைலர் கஸ்டமர்களுக்கு ரூ.449 மாத கிடைக்கிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் (லோக்கல், STD மற்றும் ரோமிங்), தினசரி 100 SMS மற்றும் 50 ஜிபி மாதாந்திர டேட்டா மற்றும் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ஜ் மூலம் 5G கவரேஜ் பகுதிகளில் ஒரு 5G கைபேசியில் இலவச அன்லிமிடெட் 5G டேட்டாவையும் அனுபவிக்க முடியும்.

ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மைகளில் 3 மாதங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் அடங்கும். இது தவிர, கஸ்டமர்கள் தங்கள் திட்டத்தில் கூடுதல் ரூ.349க்கு பிற பேமிலி கனேக்சன்களையும் சேர்க்கலாம். உங்கள் வட்டத்தைப் பொறுத்து, ரூ.250 அல்லது ரூ.300 ஆக்டிவேஷன் கட்டணம். ஜம்மு மற்றும் காஷ்மீர் சேவைப் பகுதிகளில் உள்ள கஸ்டமர்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை மாத ரென்டல் ரூ.349க்கு வாங்கலாம்.

இதில் எது பெஸ்ட்?

எனவே, ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ஏர்டெல் சேவைகளைப் பெற ரூ.199 ட்ரூலி அன்லிமிடெட் திட்டம் கிடைக்கிறது. ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவைகளை விரும்பும் பயனர்களுக்கு, நுழைவு நிலை திட்டம் ரூ.449 யில் தொடங்குகிறது. உங்களுக்கு வைஸ் மற்றும் SMS போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட அடிப்படை போன் பயனராக இருந்தால், ரூ.199 ப்ரீபெய்ட் மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இருப்பினும், டெலிகாம் நிறுவனத்தில் வொயிஸ் சார்ந்த பிற திட்டங்கள் உள்ளன.

மேலும் ரீச்சார்ஜ்செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க: Jio யின் இந்த திட்டத்தில் கிடைக்கிறது Netflix இலவச நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo