இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Bharti Airtel, தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வாங்கிய டேட்டா வசதியை வழங்குகிறது. நிறுவனம் இதை’emergency Data Loan’ வசதி என்று அழைக்கிறது. ரீசார்ஜ் செய்யாமல் இன்ஸ்டண்டாக இன்டர்நெட் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கானது இது. அதாவது கடன் வாங்கியபின் மீண்டும் ரீச்சார்ஜ் செய்யும்போது கழிக்கப்படும்
இருப்பினும், நீங்கள் சாதாரண கடனுக்காக பணம் செலுத்த வேண்டியதில்லை. எதிர்காலத்தில் வாடிக்கையாளர் டேட்டா பேக் மூலம் ரீசார்ஜ் செய்யும்போது டேட்டா கடன் தொகையை ஏர்டெல் வாங்கப்பட்ட கடனுக்கான பணத்தை பெற முடியும் , அதன் அனைத்து விவரங்களையும் பார்ப்போம்.
ஏர்டெல் வாடிக்கையாளர் USSD குறியீட்டை 5673# ஐ டயல் செய்யும் போது அல்லது CLI 56321 இலிருந்து அனுப்பப்படும் ஊடாடும் SMS க்கு “1” என்று ரிப்ளை செய்யும்போது அவருக்கு 1GB டேட்டாவை கிரெடிட்டாக வழங்குகிறது.
இந்த டேட்டா லோன் 1ஜிபி மட்டுமே. இருக்கும் மேலும், இதன் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே. இந்த டேட்டா அதே நாளில் நள்ளிரவு 12 மணிக்கு எக்ஸ்பைர் ஆகும் என்று ஏர்டெல் கூறுகிறது. டேட்டா கடனைப் பெற, உங்கள் ஏர்டெல் இணைப்பு செயலில் இருக்க வேண்டும். இதன் பொருள் உங்கள் சிம் செயலில் வேளிடிட்டியாக இருக்கும் . உங்கள் திட்டத்தில் டேட்டா பேலன்ஸ் இல்லாமலோ அல்லது தினசரி டேட்டா தீர்ந்து விட்டாலோ, ஏர்டெல்லிலிருந்து இந்த அவசரகால டேட்டா கடனைப் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் ரூ.19, ரூ.29, ரூ.49, ரூ.58, ரூ.65, ரூ.98, ரூ.148, ரூ.149 மற்றும் ரூ.301 பேக்குகளுடன் ரீசார்ஜ் செய்யும் போது 1டிபி டேட்டா கடன் திரும்பப் பெறப்படும் என்று ஏர்டெல் கூறுகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ், பிற மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் அல்லது பேமெண்ட் தளங்கள் மூலம் இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க Samsung Galaxy A25 ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் டாப் 5 அம்சம் பாருங்க
டேட்டா லோன் வசதி தற்போது தமிழ்நாடு மற்றும் பஞ்சாபில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். மற்ற மாநிலங்கள்/டெலிகாம் வட்டங்களுக்கு இந்த வசதியை நிறுவனம் எப்போது கொண்டு வரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.