வெறும் 300 ரூபாய்க்குள் கிடைக்கும் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் காலிங்
பார்தி ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்,
ஏர்டெல்லின் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் இருந்து ஒரு திட்டத்தைப் பற்றி சொல்லப் போகிறோம்,
Airtel Wynk Music போன்ற பிற நன்மைகளையும் இலவச ஹலோ ட்யூன்ஸ், Fastag கேஷ்பேக் வழங்குகிறது
பார்தி ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது பயனர்களுக்கான தினசரி டேட்டா திட்டத்தில் பல்வேறு வகையான ரீசார்ஜ் பேக்குகளை வழங்குகிறது. இன்று நாங்கள் உங்களுக்கு ஏர்டெல்லின் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் இருந்து ஒரு திட்டத்தைப் பற்றி சொல்லப் போகிறோம், இது உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா பலன்களை வழங்குவது மட்டுமல்லாமல், Wynk Music போன்ற பிற நன்மைகளையும் இலவச ஹலோ ட்யூன்ஸ், Fastag கேஷ்பேக் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ 299 ரீச்சார்ஜ் திட்டம்.
ஏர்டெல் சிறந்த ரீசார்ஜ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ரூ.299க்கு செயல்படுத்தலாம். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். வேலிடிட்டியின் போது அன்லிமிடெட் லோக்கல் , STD காலிங் மற்றும் ரோமிங் நன்மைகளைப் வழங்குகிறது இந்த திட்டம் தினசரி 2ஜிபி இணைய டேட்டாவை வழங்குகிறது. தினசரி டேட்டா லிமிட்டை அடைந்த பிறகும், உங்கள் மொபைல் இன்டர்நெட் நிறுத்தப்படாது மேலும் 64Kbps வேகத்தில் தொடர்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்..
இந்த ஏர்டெல் திட்டம் உங்களுக்கு சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. இதன் மிகப்பெரிய நன்மை அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும். இதனுடன், இந்த பேக்கில் கூடுதல் நன்மையாக FASTagல் ரூ.100 கேஷ்பேக் பெறுவீர்கள். இது தவிர, நீங்கள் இலவச ஹலோ ட்யூன்ஸ் சந்தாவைப் வழங்குகிறது, இதன் மூலம் உங்களுக்கு பிடித்த பாடலை ஹலோ ட்யூனாக அமைக்கலாம்.
மறுபுறம், நீங்கள் ம்யூசிக் கேட்பதில் அதிக விருப்பமுள்ளவராக இருந்தால், இந்த திட்டம் உங்களுக்கு Wynk Music இலவச சந்தாவை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் சமீபத்திய பாடல்களைக் கேட்கலாம் மற்றும் உங்கள் ஹலோ ட்யூனாக அமைக்கலாம். ஏர்டெல்லின் இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங்குடன் தினசரி அதிக டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் (ஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையதளம்) பார்வையிடலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile