Airtel யின் இந்த திட்டத்தில் வழங்குகிறது 1 மாதம் வரை 60GB டேட்டா இலவசமாக

Airtel யின் இந்த திட்டத்தில் வழங்குகிறது 1 மாதம் வரை 60GB டேட்டா இலவசமாக

Airtel அதன் வாடிக்கையாளர்களுக்கு சில அற்புதமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் மொபைல் இன்டர்நெட் என்பது மிகப்பெரிய தேவையாக உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது இன்டர்நெட் திட்டங்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், குறைந்த விலையில் அதிகபட்ச இன்டர்நெட்டை வழங்கும் திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. குறைந்த விலையில் மிகப்பெரிய டேட்டா நன்மைகளை வழங்கும் ஏர்டெல் திட்டமும் உள்ளது. இது அன்லிமிடெட் காலிங் திட்டம். அதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Airtel ரூ,509 ரீச்சார்ஜ் பிளான்

ஏர்டெல் அதன் பயனர்களுக்கு பல வித ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, ஆனால், மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஏர்டெல்லின் அபரிமிதமான நன்மைகளைத் தரும் அத்தகைய ஒரு அற்புதமான திட்டத்தைப் பற்றி பார்க்கலாம், இந்த திட்டத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரூ.509க்கு செயல்படுத்தலாம். இந்த திட்டத்தில் நிறுவனம் 1 மாதத்திற்கு அன்லிமிடெட் காலிங்கை வழங்குகிறது. மேலும் பயனர் முழு 60 ஜிபி அதிவேக இன்டர்நெட்டை வழங்குகிறது உங்கள் தேவைக்கேற்ப இந்தத் டேட்டாவை செலவிடலாம்.

இந்த திட்டத்தின் நிறுவனத்தின் அன்லிமிடெட் காலிங் உடன் 300 SMS இலவசமாக வழங்கப்படுகிறது, இந்தத் திட்டத்தின் வேலிடிட்டியாகும் காலம் 1 மாதம், அதாவது இது 30 நாள் லிமிட்டுடன் வரவில்லை, ஆனால் காலண்டர் மாத வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் சில கூடுதல் நன்மைகளையும் நிறுவனம் சேர்த்துள்ளது.

ஏர்டெல் இலவச ஹலோ ட்யூன்ஸ் சந்தா கிடைக்கிறது, இதில் நீங்கள் திட்டத்தின் வேலிடிட்டியாகும் வரை டயலர் டியூனையோ அல்லது ஹலோ டியூனையோ வெவ்வேறு பாடல்களாக உங்கள் மொபைலில் அமைக்கலாம். இது தவிர, அப்பல்லோ 24|7 வட்டத்தின் 3 மாத மெம்பர்களுக்கு கிடைக்கும். பல நன்மைகளுடன், இது உங்களுக்கு தனி Wynk மியூசிக் இலவச சந்தாவையும் வழங்குகிறது, இதில் நீங்கள் இசை, ஹெலோட்யூன்ஸ், லைவ் கச்சேரிகள் மற்றும் பாட்காஸ்ட்களை அனுபவிக்க முடியும்.

இதையும் படிங்க: Reliance Jio வாடிகையலர்கக்கு DIWALI DHAMAKA ஆபர் அறிவிப்பு

இது அன்லிமிடெட் 5G நன்மைகளுடன் வருகிறது. அதாவது, ஏர்டெல் 5ஜி சேவை உங்கள் பகுதியில் இருந்தால், இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி இன்டர்நெட்டையும் பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo