Airtel யின் சூப்பர் ஆபர் இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் இலவச டேட்டா மற்றும் OTT நன்மை.
ஏர்டெல் அதன் பிரபலமான திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது
ஏர்டெல் ரூ.359 திட்டத்தை மாற்றி பயனர்களுக்கு ஆச்சரியமான பரிசை வழங்கியுள்ளது
ர்டெல் ரூ.359 திட்டத்தின் வேலிடிட்டி அதிகரித்துள்ளது
ஏர்டெல் அதன் பிரபலமான திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது, இதனால் ஏர்டெல் பயனர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். உண்மையில் ஏர்டெல் ரூ.359 திட்டத்தை மாற்றி பயனர்களுக்கு ஆச்சரியமான பரிசை வழங்கியுள்ளது. ஏர்டெல் ரூ.359 திட்டத்தின் வேலிடிட்டி அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் நீண்ட காலத்திற்கு இலவச டேட்டா, காலிங் மற்றும் மெசேஜ்களை அனுபவிக்க முடியும். அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்…
முழுமையாக ஒரு மாதங்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும்.
டெலிகாம் டாக் அறிக்கையின்படி, ஏர்டெல்லின் ரூ.359 ப்ரீ-பெய்டு திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் .. இருப்பினும், இப்போது இந்த திட்டத்துடன் ஒரு மாதம் வேலிடிட்டியாகும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது பயனர்கள் டேட்டா , காலிங், மெசேஜ் அனுப்புதல் மற்றும் OTT பயன்பாடுகளை 28 நாட்களுக்குப் பதிலாக 31 நாட்களுக்கு முழுமையாக அனுபவிப்பார்கள். ஒரு முழு மாதத்திற்கு அதாவது 31 நாட்களுக்கு குறைந்தபட்சம் ஒரு திட்டத்தையாவது வழங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு பிறப்பித்துள்ளது.
Airtel யின் 359 ரூபாய் கொண்ட திட்டம்.
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் புதிய மாற்றத்திற்கு பிறகு 56 ஜிபிக்கு பதிலாக மொத்தம் 62 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை அனுபவிக்க முடியும். இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. இதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் Airtel Xstreamஆப் 28 நாட்களுக்கு இலவச சபஸ்க்ரிப்ஷனுடன் கிடைக்கிறது, இதனுடன் மேலும், இந்த திட்டத்தின் ரீசார்ஜில், பயனர்களுக்கு ஏர்டெல் மூலம் SonyLiv, LionsgatePlay, ErosNow செயலிகளின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. இதனுடன், பயனர்கள் 3 மாதங்களுக்கு இலவச Hello Tune Wynk இசையை அனுபவிக்க முடியும்.
குறிப்பு – இதுபோன்ற மற்றொரு திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்துகிறது, இது 31 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile