ஏர்டெல் இந்தியா நிறுவனம் பயனர்கள் தங்களின் சாதாரண டிவி-யை ஸ்மார்ட் டிவி-யாக மாற்றிக் கொள்ளும் வசதியை ரூ. 1500-க்கு வழங்குகிறது. வீட்டில் பொழுதுபோக்கிற்கான அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட் டிவி-க்கள் மாறி வருகின்றன. சமீப காலங்களில் ஒடிடி சேவை அதிக பிரபலம் அடைந்து விட்ட நிலையில், பல்வேறு வீடுகளில் ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.
இதனுடன் ஏர்டெல் மற்ற சேவைகளான ஏர்டெல் பிளாக் ஒருங்கிணைத்து பெற முடியும். ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் சோனி லிவ், அமேசான் பிரைம், இரோஸ் நௌ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் பல்வேறு ஒடிடி தளங்களை கொண்ட செட் டாப் பாக்ஸ் ஆகும். இதில் 5 ஆயிரத்திற்கும் அதிக செயலிகள் உள்ளன.
அந்த வகையில், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் பயனர்களின் சாதாரண டிவி-யை ஸ்மார்ட் டிவி-யாக மாற்றுகிறது. எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் கொண்டு ஒடிடி டேட்டாக்களை டிவி-யில் ஸ்டிரீம் செய்து பார்க்க முடியும். ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் சாதனமான ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் விலை ரூ. 1500 என மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 650 ஆகும். எனினும், தற்போது இதன் விலை ரூ. 1500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், 500-க்கும் அதிக டிவி சேனல்கள், கூகுள் அசிஸ்டண்ட் மூலம் சர்ச் வசதி, ஆண்ட்ராய்டு டிவி 9 உள்ளது. இந்த செட் டாப் பாக்ஸ் தரவுகளை 4K ரெசல்யூஷனிலும் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் ரிமோட் பல்வேறு ஒடிடி தளங்களுக்கான ஹாட்கீ கொண்டுள்ளது. ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அருகாமையில் உள்ள ரிடெயில் ஸ்டோர் சென்று ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ்-ஐ வாங்கிக் கொள்ளலாம்.