Airtel யின் இந்த திட்டத்திற்கு முன்பு ஜியோவின் மத்த பிளான் சும்மா

Updated on 02-May-2024
HIGHLIGHTS

Bharti Airtel அதன் தொகுக்கப்பட்ட சேவையானAirtel Black சில காலமாக வழங்கி வருகிறது

. Airtel Black யின் முதல் நன்மை என்னவென்றால், பயனர்கள் வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனி பில்களை செலுத்த வேண்டியதில்லை

ஏஇது ரூ. 1000 க்கு கீழ் விலை மற்றும் கஸ்டமர்களுக்கு DTH மற்றும் பிராட்பேண்ட் கனெக்சன் வழங்குகிறது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் தொகுக்கப்பட்ட சேவையானAirtel Black சில காலமாக வழங்கி வருகிறது. இது பல வழிகளில் கஸ்டமர்களுக்கு வசதியை வழங்குகிறது. Airtel Black யின் முதல் நன்மை என்னவென்றால், பயனர்கள் வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனி பில்களை செலுத்த வேண்டியதில்லை. ஏர்டெல்லின் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் ஒரே பில்லில் தொகுக்கப்பட்டுள்ளன, எனவே இது பல பில்களை செலுத்தும் வாடிக்கையாளர்களின் தலைவலியைக் குறைக்கிறது. இன்று நாம் ஏர்டெல் பிளாக் திட்டத்தைப் பற்றி பேசப் போகிறோம், இது ரூ. 1000 க்கு கீழ் விலை மற்றும் கஸ்டமர்களுக்கு DTH மற்றும் பிராட்பேண்ட் கனெக்சன் வழங்குகிறது.

Airtel Black Rs 899 Plan

இந்த திட்டத்தின் விவரங்களுக்குச் செல்வதற்கு முன், இறுதி பில் உருவாக்கப்படும் போது, ​​வாடிக்கையாளர்கள் ரூ. 899 மற்றும் 18% வரியைச் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம், இந்தத் திட்டத்திற்கு லாக்-இன் காலம் இல்லை, அதாவது வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் அதை விட்டுவிடலாம்.

Airtel Black திட்டத்தின் கீழ் 899ரூபாயில் கஸ்டமர்களுக்கு ஒரு பிராட்பேண்ட் கனெக்சன் வழங்குகிறது,, இந்த பிராட்பேண்ட் இணைப்பின் மூலம், பயனர்கள் 100 Mbps வரையிலான இணைய வேகம் மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் நிலையான-வரி (லேண்ட்லைன்) இணைப்பு ஆகியவற்றைப் பெறுவார்கள். நிறுவனம் அதை வழங்காததால் வாடிக்கையாளர் லேண்ட்லைனுக்கான உபகரணங்களை தனித்தனியாக வாங்க வேண்டும்.

இதன் பிறகு DTH கனெக்சன் வழங்குகிறது, இதில் 350 வரையிலான டிவி சேனல்களுடன் வருகிறது. நிறுவனம் DTH கனேக்சனுக்காக கஸ்டமர்களுக்கு எக்ஸ்ட்ரீம் பாக்ஸை வழங்கும். இது தவிர, இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் உள்ளிட்ட OTT நன்மைகளும் அடங்கும், இது SonyLIV, Lionsgate Play மற்றும் பிற போன்ற 12+ ஆப்ஸின் உள்ளடக்கத்திற்கான அக்சஸ் பயனர்களுக்கு வழங்கும்.

ஏர்டெல் இந்த திட்டத்தை சிறந்த விற்பனையாளராகக் குறித்துள்ளது. நிறுவனத்தின் நிலையான 100 Mbps திட்டத்துடன் நீங்கள் சென்றால், உங்களுக்கு மாதத்திற்கு ரூ.799 + வரிகள் செலுத்த வேண்டும். அதேசமயம், ஏர்டெல் பிளாக் கீழ், டிவி சேனல்கள் மற்றும் OTT நன்மைகளுடன் DHT கனேக்சனை பெறுவதால், செலவுகள் கணிசமாகக் குறையும்.

இதையும் படிங்க:Upcoming smartphones: May 2024 யில் வர இருக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :