Airtel செம்ம பிளான் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் Netflix தனியாக ரீச்சார்ஜ் செய்ய தேவை இல்லை

Airtel செம்ம பிளான் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் Netflix தனியாக ரீச்சார்ஜ் செய்ய தேவை இல்லை
HIGHLIGHTS

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கச்டமர்களுக்காக நெட்ஃபிளிக்ஸ் உடன் வரும்

நெட்ஃபிளிக்ஸ், மிகவும் பிரபலமான OTT பிளாட்பார்மில் ஒன்றாக இருக்கிறது

நெட்ஃபிளிக்ஸ் மற்ற OTT பிளாட்ட்பர்ம்களை விட பல மடங்கு அதிக விலை கொண்டது

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கச்டமர்களுக்காக நெட்ஃபிளிக்ஸ் உடன் வரும் இதுபோன்ற சில திட்டங்களைக் கொண்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், மிகவும் பிரபலமான OTT பிளாட்பார்மில் ஒன்றாக இருப்பதால், பல இந்தியர்கள் சப்ஸ்க்ரைப் செய்வதற்க்கு விலையுயர்ந்த தளமாக இருக்கலாம்.

விலையைப் பொறுத்தவரை, நெட்ஃபிளிக்ஸ் மற்ற OTT இயங்குதளங்களை விட பல மடங்கு அதிக விலை கொண்டது மேலும் இது எந்த தள்ளுபடி வருடாந்திர திட்டமும் இல்லை. பயனர்கள் Netflix மாதாந்திர அடிப்படையில் மட்டுமே வாங்க முடியும். எனவே, இந்திய பயனர்கள் வாங்கக்கூடிய இலவச Netflix உடன் வரும் சில மொபைல் திட்டங்கள் உள்ளன. நாம் பேசப்போகும் Netflix மொபைல் திட்டங்களில் 380 மில்லியனுக்கும் அதிகமான ஏர்டெல் கஸ்டமர்கள் சப்ஸ்க்ரைப் செய்ய முடியும்.

Netflix யின் OTT நன்மையுடன் ஏர்டெல் வழங்கும் மூன்று திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ப்ரீபெய்ட் திட்டமாகும், மீதமுள்ள இரண்டு போஸ்ட்பெய்டு திட்டங்கள். ப்ரீபெய்ட் திட்டம் ரூ.1499 மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.1199 மற்றும் ரூ.1499க்கு வருகிறது. முதலில் போஸ்ட்பெய்டு திட்டங்களைப் பார்ப்போம்.

Airtel Rs 1199 Postpaid Plan

ஏர்டெல்லின் ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டமானது 1 வழக்கமான சிம் மற்றும் 3 குடும்ப ஆட்-ஆன் திட்டங்களுடன் வருகிறது. பயனர்கள் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் 150ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இது தவிர, இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் OTT நன்மைகள் Netflix, Amazon Prime Video மற்றும் Disney + Hotstar Mobile ஆகியவை அடங்கும்.

Airtel Rs 1499 Postpaid Plan

அடுத்ததாக ரூ.1499 திட்டம் 200ஜிபி டேட்டாவுடன் 200ஜிபி டேட்டா ரோல்ஓவருடன் வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு வழக்கமான மற்றும் நான்கு பேமிலி ஆட்-ஆன் கனெக்சன் உள்ளன. இது தவிர, பயனர்களுக்கு தினசரி 100 SMS மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. அதன் OTT நன்மைகளில் Netflix, Amazon Prime Video மற்றும் Disney+ Hotstar Mobile ஆகியவை அடங்கும்.

Airtel Rs 1499 Prepaid Plan

கடைசியாக ரூ 1499 ப்ரீபெய்ட் திட்டம் வருகிறது. இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. இங்கு கஸ்டமர்களுக்கு Netflix Basic, Unlimited 5G Data, Apollo 24|7 Circle, Free HelloTunes மற்றும் Wynk Music போன்ற கூடுதல் நன்மைகளை 84 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க Tecno Camon 30 சீரிஸ் அறிமுக தேதி, மற்றும் மற்ற தகவல் லீக்

ரூ.1199 மற்றும் ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo