digit zero1 awards

Airtel World Pass plans: ஏர்டெல் வழங்குகிறது 184 நாடுகளுக்கு இலவச டேட்டா மற்றும் காலிங் திட்டம்.

Airtel World Pass plans: ஏர்டெல் வழங்குகிறது 184  நாடுகளுக்கு இலவச டேட்டா மற்றும் காலிங் திட்டம்.
HIGHLIGHTS

பார்தி ஏர்டெல் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

ஏர்டெல் பயனர்கள் 184 நாடுகளில் இலவச இணையம் மற்றும் அழைப்பு வசதியைப் பெறுவார்கள்

நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களையும் பேக்குகளையும் கொண்டிருந்தன.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் ஆரம்ப விலை 649 ரூபாய். இந்த திட்டத்தில், ஏர்டெல் பயனர்கள் 184 நாடுகளில் இலவச இணையம் மற்றும் அழைப்பு வசதியைப் பெறுவார்கள். இதுவரை டெலிகாம் நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களையும் பேக்குகளையும் கொண்டிருந்தன.

உண்மையில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டிற்கும் சர்வதேச பயணங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த ஓராண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களை மனதில் வைத்து ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் உலகின் எந்த நாட்டிலும் 24X7 கால் சென்டர் ஆதரவைப் பெறுவார்கள்.

ஏர்டெல் வேர்ல்ட் போஸ்ட்பெய்ட்  திட்டங்கள்.

ஏர்டெல்லின் புதிய வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜின் ஆரம்ப விலை ரூ.649. ரூ.649 திட்டத்தில் ஒரு நாள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். இந்தத் திட்டத்தில், லோக்கல் மற்றும் இந்தியாவில் காலிங்கிற்கு 100 நிமிடங்கள் மற்றும் 500 எம்பி அதிவேக டேட்டா கிடைக்கிறது.

  • ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் ரூ.2,999 திட்டம் – 10 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த திட்டத்தில் 5 ஜிபி டேட்டா மற்றும் காலிங்க்கு ஒரு நாளைக்கு 100 நிமிடங்கள்.
  • ரூ 3,999 திட்டம் – இந்த திட்டத்தில், ஒரு மாத வேலிடிட்டியாகும். இந்த திட்டம் 100 நிமிட வொய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
  • ரூ.5,999 திட்டம்- இந்த திட்டத்தில், 900 நிமிடங்கள் (15 மணிநேரம்) வொய்ஸ் காலிங் மற்றும் 2 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியாகும்.
  • ரூ.14,999 திட்டம் – இந்த திட்டத்தில், நீங்கள் ஒரு வருட செல்லுபடியாகும். திட்டத்தில் 3000 நிமிட குரல் அழைப்பு மற்றும் 15 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் ப்ரீ-பெய்டு திட்டங்கள்.

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் ப்ரீ-பெய்டு திட்டங்களின் வடிவத்தில் நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் மலிவான திட்டம் ரூ.649 ஆகும். இந்த திட்டத்தில், 500 எம்பி டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு வசதி ஒரு நாள் வேலிடிட்டியாகும் ரூ.899 திட்டமானது 10 நாட்கள் வேலிடிட்டி, 100 நிமிட காலிங் மற்றும் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.2,998 வேர்ல்டு பாஸ் ப்ரீ-பெய்டு திட்டமானது 200 நிமிட அழைப்பு மற்றும் 5ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டியாகும். அதே நேரத்தில், ரூ.2,997 திட்டத்தில் ஒரு வருட வேலிடிட்டி மற்றும் 100 நிமிட வொய்ஸ் காலிங்  கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo