குறைந்த விலையில் கிடைக்கும் 5G இன்டர்நெட் Airtel மற்றும் Jio ப்ரீபெய்ட் திட்டத்தில் எது பெஸ்ட் ?
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை நாட்டில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இன்டர்நெட் சேவையை வேகமாக அறிமுகப்படுத்தி வருகின்றன
ஏர்டெல்லின் குறைந்த விலையில் ரூ.299 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
5G இன்டர்நெட் வசதியை வழங்கும் ஜியோவின் குறைந்த விலைதிட்டம் ரூ.249 ஆகும்.
டெலிகாம் சேவை வழங்குனர்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை நாட்டில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இன்டர்நெட் சேவையை வேகமாக அறிமுகப்படுத்தி வருகின்றன. நீங்கள் இந்த நிறுவனங்களில் ஏதேனும் ஒரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்து, 5G அதிவேக இணையப் பேக்கைத் தேடுகிறீர்களானால், இந்தச் செய்தி உங்களுக்காகத்தான், ஏனென்றால் ஜியோ மற்றும் ஏர்டெல் 5G இணைய வசதியை வழங்கும் சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன,
AIRTEL RS 299 5G PACK
ஏர்டெல்லின் குறைந்த விலையில் ரூ.299 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது 5ஜி வேகத்தில் இயங்கும். இதனுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியும் கிடைக்கும்.
ஏர்டெல்லின் மற்ற திட்டடங்கள்.
இதை தவிர ஏர்டெல் 319 ரூபாய் மற்றும் 359 ருபாய் கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாக இருக்கிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் தினமும் 2GB இன்டர்நெட் நனமை வழங்குகிறது மேலும் இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS நம்மை இதில் அடங்கியுள்ளது, இதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் ஏர்டெல் பேக்ஸ் நன்மையை வழங்குகிறது.
ரூ.399 ப்ரீபெய்ட் திட்டமானது, மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களைப் போலவே அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது, ஆனால் கூடுதலாக, இந்த திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவச மொபைல் சந்தாவைப் பெறலாம்.
அதிக இன்டர்நெட் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் 499 ரூபாய் கொண்ட திட்டம் சிறந்த திட்டமாகவும். தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டியாகும்
நீங்கள் ஒரு மாதத்திற்கு மேல் வேலிடிட்டியாகும் திட்டத்தை வாங்க விரும்பினால், நிறுவனத்திடம் ரூ.549 திட்டம் உள்ளது, அதில் உங்களுக்கு 56 நாட்கள் வெளிடிடியாகும். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
JIO RS 249 5G PACK
5G இன்டர்நெட் வசதியை வழங்கும் ஜியோவின் மலிவான திட்டம் ரூ.249 ஆகும். இந்த திட்டத்தில், அன்லிமிடெட் காலிங் மற்றும் 23 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.
ஜியோவின் மற்ற நன்மைகள்.
திட்ட பலன்களுக்கு கூடுதலாக, ரூ.299 ஜியோ பேக் ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.
ஜியோவின் ரூ.533 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile