ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் வாங்கினால் 1000ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும்.\
. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிதாக கேஷ்பேக் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களை மாற்றி அமைத்து வந்த நிலையில், தற்பொழுது ஜியோ உடன் போட்டிஇடும் விதமாக ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்காக . 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிதாக கேஷ்பேக் வழங்குகிறது.
இதனால் புதிய 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் ஜியோஃபை சாதனத்திற்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல் ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை எவ்வாறு பெற வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சலுகை
கேஷ்பேக் தொகை போஸ்ட்பெயிட் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதனை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கியதும் ரூ. 399 அல்லது ரூ. 499 சலுகையில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் ரூ. 300 ஆக்டிவேஷன் கட்டணத்தை செலுத்த வேண்டும். சாதனத்தை வாங்கி ஆக்டிவேட் மற்றும் ரீசார்ஜ் செய்ததும் இரண்டில் ஒரு சலுகையை ரீசார்ஜ் செய்ததும், ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம்.
ஏர்டெல் ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு மாதம் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டாவது சலுகையில் பயனர்களுக்கு மாதம் 75 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகை நாடு முழுக்க அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் ரூ. 399 சலுகை சில வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.
முன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தின் விலை ரூ. 999 குறைக்கப்பட்டது. இருப்பினும், இதன் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை பெற பயனர்கள் முதலில் ரூ. 2000 கொடுத்து 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க வேண்டும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile