ஜியோ, வோடபோன் போல ஏர்டெலும் VoLTE சேவையை கொண்டு வந்துள்ளது
பாரதி ஏர்டெல் தற்சமயம் இந்த சேவையை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் VoLTE சேவை தற்சமயம் தேசிய ரோமிங்கின் போதும் வேலை செய்யும் என டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் VoLTE தொழில்நுட்பத்தில் தேசிய ரோமிங் சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பாரதி ஏர்டெல் தற்சமயம் இந்த சேவையை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் VoLTE சேவை தற்சமயம் தேசிய ரோமிங்கின் போதும் வேலை செய்யும் என டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் VoLTE சேவைகளை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து தற்சமயம் நாடு முழுக்க சுமார் 21 டெலிகாம் வட்டாரங்களில் தேசிய ரோமிங் வசதியில்லாமல் வழங்க துவங்கியது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது பங்கு மற்றும் பத்திர விற்பனை மூலம் ரூ.32,000 கோடி நிதி திரட்ட நிர்வாக குழு இயக்குனர்கள் ஒப்புதல் வழங்கியிருப்பதாக அறிவித்தது.
வோடபோன் ரூ.129 பிரீபெயிட் சலுகை குஜராத், சென்னை மற்றும் இதர முக்கிய வட்டாரங்களில் கிடைக்கிறது. வோடபோன் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோவின் ரூ.98 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் சமீபத்தில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. புதிய ரூ.129 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 SMS , 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile