இப்பொழுது AIRTEL இந்தியாவில் வீடியோ கான்பரன்சிங் ஆப் அறிமுக செய்ய உள்ளது.

Updated on 06-Jul-2020
HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவில் ஜியோ மீட் என்ற வீடியோ அழைப்பு தளத்தை அறிமுகப்படுத்தியது,

ஜியோ நிறுவனத்தை போன்றே பாரதி ஏர்டெல் நிறுவனமும் வீடியோ கான்பரன்சிங் செயலி கொண்ட டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

உலகளவில் தேவை அதிகரித்துள்ள நிலையில், வீடியோ கான்பரன்சிங் சேவை இப்போது சந்தையில் பெரிய வீரர்களுக்கான புதிய விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. சமீபத்தில், தொலைதொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் ஜியோ மீட் என்ற வீடியோ அழைப்பு தளத்தை அறிமுகப்படுத்தியது, இப்போது அது அதன் போட்டியாளரான பாரதி ஏர்டெல் நிறுவனத்திடமிருந்தும் இந்தியாவில் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்த வருகிறது. தயாராகி வருகிறது

தற்சமயம் ஊரடங்கு காரணமாக ஜூம், கூகுள் ஹேங்அவுட்ஸ், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற வீடியோ கான்பரன்சிங் செயலிகள் அதிக பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனக்கான வீடியோ கான்பரன்சிங் செயலியை ஜியோமீட் எனும் பெயரில் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை போன்றே பாரதி ஏர்டெல் நிறுவனமும் வீடியோ கான்பரன்சிங் செயலி கொண்ட டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த செயலி கட்டண அடிப்படையிலும், பின் வரவேற்புக்கு ஏற்ப வழக்கமான செயலியாக வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய வீடியோ கான்பரன்சிங் செயலி பயனர் விவரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர்டெல் புதிய சேவை அதிநவீன AES 256 ரக என்க்ரிப்ஷன் கொண்டிருக்கும் என்றும் இது மொபைல் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.

வீடியோ கான்பரன்சிங் செயலி தவிர ஏர்டெல் நிறுவனம் பல்வேறு வர்த்தகம் சார்ந்த சேவைகளை துவங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் 2500 பெரும் நிறுவனங்கள் மற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிக சிறு மற்றும் குறுந்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :