டெலிகாம் துறையில் தனியார் (Private ) தொலைபேசி நிறுவனமான ‘ஏர்செல்’ நிறுவனம் கடந்த 10 வருடத்துக்கு மேலாக சிறந்த சேவையை வழங்கி வந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ’ சேவை வந்ததில் இருந்து ஏர்செல் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. Rs 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஏர்செல் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதால் [போன் சேவையை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறினார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் தனியார் கட்டிடங்களில் 950-க்கும் மேற்பட்ட சிக்னல் டவர் உள்ளது இவர்களால் வாடகை கொடுக்க முடியவில்லை.
இதேபோல் நாடு முழுவதும் உள்ள சிக்னல் டவர் வாடகை கொடுக்க முடியாததால் அதன் சேவை துண்டிக்கப்பட்டது.
ஏர்செல் நிறுவனத்தினர் கடன் வாங்கி நிதி நெருக்கடியை சமாளிக்க முயன்றனர். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தினரின் ‘தொழில் புரட்சியால்’ ஏர்செல் நிறுவனம் மேலும் மேலும் நஷ்டத்தை சந்தித்தது.
இதனால் கடனை தீர்க்க முடியாத அளவுக்கு சென்று நஷ்டம் ஆனதால் ஏர்செல் நிறுவனத்தினர் தொடர்ந்து சேவையை வழங்க முடியாமல் மூடிவிட்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத வாடிக்கையாளர்கள் திக்கு முக்காடினர். செல்போன் சேவை துண்டிக்கப்பட்டதால் கடும் அவதிப்பட்டனர். இந்தியா முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்கு 87 மில்லியன் வாடிக்கையாளர்களும் தமிழகத்தில் 1 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக வேறு தொலைதொடர்பு சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
மேலும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஏர்செல் நம்பரை வைத்து ஏர்டெல் வோடபோன் சேவைகளுக்கு மாறி வருகின்றனர். இதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன் நிறுவனத்துக்கு மாறி விட்டனர் BSNL . நிறுவனத்துக்கு 8 லட்சம் வாடிக்கையாளர்கள் சென்று விட்டனர்.
இதுபற்றி தொலைதொடர்பு துறை உயர் அதிகாரி கூறுகையில், ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் கடந்த 3 நாளில் மட்டும் தமிழகத்தில் அதன் வாடிக்கையாளர்கள் 70 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். சேவை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.