Solar Eclipse 2025: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேரம் எங்கு எப்பொழுது பார்க்கலாம் பாரங்க

Updated on 27-Mar-2025

Solar Eclipse 2025: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29,2025 அன்று நடைபெற இருக்கிறது இந்த இது ஒரு முக்கியமான நிகழ்வு. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, ​​சந்திரனுக்குப் பின்னால் இருக்கும் சூரியனின் உருவம் சிறிது நேரம் முழுமையாக மூடியிருக்கும். இந்த செயல்முறையே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த சூரிய கிரகணம் 4 மணி நேரத்திற்க்கு நீடிக்கும் என்றாலும் இது ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியும் இது எந்த இடம் நேரம் போன்ற பல தகவல்களை அறிவோம் வாங்க.

சூரிய கிரகணம் எங்கு எங்கு தெரியும்?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து பகுதி சூரிய கிரகணம் தெரியும். பரந்த பிராந்தியத்தில் தெரியும் அதே வேளையில், வட அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்கள் சூரிய உதயத்தின் போது சிறந்த அனுபவத்தைப் பெறுவார்கள். இருப்பினும், இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் சூரிய கிரகணம் தெரியாது.

சூரிய கிரகணம் 2025 நேரம் என்ன ?

இந்தியாவில் நடக்கும் முதல் சூரிய கிரகணம் மார்ச், 2025 29 2:20 PM IST அதிகபட்சமான கிரகணம் 4:17 இருக்கும் மேலும் இந்த கிரகணம் 6:13 PM முடிவடையும் ஆகமொத்தம் இது 4 மணிநேரம் நிகழும்.

கிரகணத்தின் போது இதை மட்டும் தப்பி தவறி கூட செய்யாதிங்க.

  • ஜோதிடர்களின் கூற்றுப்படி, கிரகணம் தொடங்கும் போது வீட்டில் எந்த பூஜையும் செய்யக்கூடாது. இதைச் செய்வது அசுபமானது.
    கிரகணத்தின் போது கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகளைத் தொடாதீர்கள்.
  • கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது மேலும் எதாவது காய் கரி நறுக்கும் வேலையும் செய்யகூடாது
  • கிரகணத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை உணவு உட்கொள்ளக்கூடாது. இது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
  • கிரகணம் தொடங்கிய பிறகு, எந்த எதிர்மறை இடங்களுக்கும் செல்ல வேண்டாம். இது நியாயமில்லை.

கிரகணத்தின் போது இதை செய்தல் நல்லது

நீங்கள் விஷ்ணுவின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இதனுடன், உங்கள் மனதை அமைதிப்படுத்த தியானம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, கிரகணம் முடிந்ததும், குளித்துவிட்டு உங்கள் திறனுக்கு ஏற்ப தானம் செய்யுங்கள்.

கர்ப்பிணி பெண்கள் கிரகணம் முடிந்த பின் குளுத்துவிட்டு சாமி கும்பிட்ட பிறகு உணவு சாப்பிடுவது நல்லது

இதையும் படிங்க Chandra Grahan Time: நாளை இந்திய நேரம் என்ன என்று முழுசா பாருங்க இதனால் யாருக்கு பயன் யாருக்கு பாதிப்பு பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :