4000ரூபாயில் பேஸ் அன்லோக் வசதியுடன் Xolo-Era 4X ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

Updated on 05-Jan-2019
HIGHLIGHTS

புதிய Xolo ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கு ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பின் Xolo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. Xolo இரா 4X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் HD . பிளஸ் ஸ்கிரீன், 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

போட்டோக்களை எடுக்க 8 MP . பிரைமரி கேமரா, 5 MP  செல்ஃபி கேமரா, இரு கேமரா சென்சார்களுக்கும் LED . ஃபிளாஷ், டூயல் 4ஜி வோல்ட்இ, 3000Mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

புதிய Xolo ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் வழங்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கு ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Xolo Era 4X சிறப்பம்சங்கள்

– 5.45 இன்ச் HD. பிளஸ் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, LED  ஃபிளாஷ்
– ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah . பேட்டரி

விலை  மற்றும்  விற்பனை 
Xolo Era 4X  ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.4,444 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோலோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் அமேசான் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மெமரி மற்றும் ரேம் விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :