3 மாதங்களில் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனை செய்தது Xiaomi POCO F1
சியோமியின் சப் பிரான்டு போகோ தனது F1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமாகி விற்பனை துவங்கிய மூன்றே மாதங்களில் போகோ F1 ஸ்மார்ட்போன் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
சியோமியின் சப் பிரான்டு போகோ தனது F1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமாகி விற்பனை துவங்கிய மூன்றே மாதங்களில் போகோ F1 ஸ்மார்ட்போன் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
போகோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புது விற்பனை சாதனையை கொண்டாடும் வகையில் போகோ F1 ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பிளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வெப்சைட்களில் போகோ F1 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ் கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் விலை ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
போகோ F1 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட மாடல் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் முந்தைய விலையில் இருந்து ரூ.3,000 வரை குறைவு ஆகும். இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
போகோ F1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.3,000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
போகோ F1 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஃபுல்HD . பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜி.பி. ரேம் மற்றும் லிக்விட்-கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 20 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும், AI அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. IR ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் போகோ F1 மாடல் இருள் நிறைந்த இடங்களிலும் 0.4 நொடிகளில் அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகோ F1 சிறப்பம்சங்கள்:
– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile