digit zero1 awards

போகோபோன் F 1 ப்ளிப்கார்ட் வெப்சைட்டில் எக்ஸ்க்ளூசிவ் விற்பனக்கு வர இருக்கிறது …!

போகோபோன் F 1 ப்ளிப்கார்ட் வெப்சைட்டில் எக்ஸ்க்ளூசிவ் விற்பனக்கு  வர இருக்கிறது  …!
HIGHLIGHTS

ஒப்போ நிறுவனத்தின் ரியல்மி சியோமிக்கு போட்டியாக, சியோமியின் புதிய போகோ பிரான்டு துவங்கப்படுவதாக கூறப்படுகிறது

சியோமி நிறுவனத்தின் போகோ பிரான்டு இந்தியாவில் போகோபோன்  F1  ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருக்கிறது.

ஒப்போ நிறுவனத்தின் ரியல்மி சியோமிக்கு போட்டியாக, சியோமியின் புதிய போகோ பிரான்டு துவங்கப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் போகோபோன் என டீஸ் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் போகோ என்று டீஸ் செய்யப்பட்டது.

https://static.digit.in/default/5e413cd1bf02e658edb245888d806e9d4c8f7111.jpeg

ஆகஸ்டு 22-ம் தேதி இந்தியாவில அறிமுகமாகும் போகோபோன் எஃப்1 இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் விளம்பர தூதராக பி.வி. சிந்து நியமிக்கப்பட்டு இருப்பதையும் புதிய அறிவிப்பு உணர்த்துகிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை போகோபோன் எஃப்1 மாடலில் 6.0 இன்ச் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், லிக்விட் கூலிங் வசதி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் பிரைமரி கேமரா, ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பின்புறைம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

போகோபோன் F 1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்பி செல்ஃபி கேமரா, LED. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah. பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி போகோபோன் F1 ஸ்மார்ட்போனின் டீசர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் முழு விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும். முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் போகோபோன் அதன்பின் சர்வதேச சந்தைளில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo