TENAA வில் காணப்பட்டது Xiaomiயின் புதிய ஸ்மார்ட்போன்கள்

TENAA வில் காணப்பட்டது  Xiaomiயின் புதிய ஸ்மார்ட்போன்கள்
HIGHLIGHTS

Xiaomi M1804C3DE, M1804C3CC மற்றும் M1804C3CE ஸ்பெசிபிகேஷன் லீக் ஆகியது வாருங்கள் பார்ப்போம்

சியோமி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சீன வலைத்தளமான TENAA மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் M1804C3CC, M1804C3DE மற்றும் M1804C3CE என்ற மாடல் எண்களை கொண்டுள்ளன. 

இதன் மூலம் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 5.45 இன்தச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் பிரைமரி கேமரா மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கொண்ட மாடல் ரெட்மி 6ஏ என்றும் கைரேகை சென்சார் இல்லாத மாடல் ரெட்மி6 என்று அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
– 2 ஜிபி / 3ஜிபி / 4ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– இரண்டாவது பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி

சியோமி ரெட்மி 6A எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
– 2 ஜிபி / 3ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி

இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களும் புளு, பிளாக், சில்வர், வைட், கோல்டு, ரோஸ் கோல்டு, பர்ப்பிள் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo