சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.
புதிய ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் HD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12என்எம் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI9 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ A22 12என்எம் குவாட்கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பாலிகார்பனைடே மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ரெட்மி 6ஏ பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் சர்ஃபேஸ் கொண்டுள்ளது
சியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்: மற்றும் ஸ்பெசிபிகேஷன்
இந்த சியோமி ரெட்மி 6யில் ஒரு 5.45 இன்ச் HD+ டிஸ்பிளே உடன் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ இருக்கிறது Xiaomi Redmi 5,ஸ்மார்ட்போனை கம்பேர் பண்ணும்போது டிசைன்ல எந்த மாறுதலும் இல்லை ரெட்மி 6 யின் ஆனால் ரெட்மி 6 யில் இரட்டை கேமரா இருக்குது மீடியாடேக் ஹீலியோ P22 சிப்செட் பயன்படுத்தி இருக்கிறதுல இது இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும் இதனுடன் இதுல AI அம்சமும் இருக்கிறது இந்த போன் 2 வகையில இருக்குது 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இதன் மற்றொரு வகை 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில இருக்குது இதனுடன் நீங்கள் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்கலாம்
இந்த போனில் ஒரு 12MP பிரைமரி கேமரா உடன் 5MP செகண்டரி சென்சார் இருக்கிறது. இந்த ரெட்மி 6 பேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது இதன் முன் புறத்தில் ஒரு எம்பி செல்ஃபி கேமரா செல்பி கேமரா இருக்கிறது மற்றும் இந்த போன் MIUI 10 அவுட் ஒப் பாக்சில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையில் இயங்குகிறது இதில் கூடுதலாக சியோமி பல AI அம்சங்களுடன் கொண்டுவந்துள்ளது உதாரணத்துக்கு டெக்ஸ்ட் ட்ரான்ஸ்லேஷசன் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பார்ட்களில் MIUI 10.இருக்கிறது மற்றும் இந்த போனில் ஒரு 3000mAh mah பேட்டரி இருக்கிறது
சியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்: மற்றும் ஸ்பெசிபிகேஷன்
சியோமி ரெட்மி 6 A வில் இன்ச் டிப்பிலே இருக்கிறது அதன் ரெஸலுசன் 1440×720 HD பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே இருக்கிறது இதனுடன் இது 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9 யில் இயங்குகிறது இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கிறது இதனுடன் இதன் ஸ்டோரேஜை அதிகரித்து கொள்ளலலாம் இதனுடன் இது இரட்டை சிம் ஸ்லாட் உடன் வருகிறது மற்றும் இதில் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா இருக்கிறது மற்றுமிதனுடன் இதில் 3000mah பேட்டரி இருக்கிறது
சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் கிரெ, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 15-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.
சீனாவில் ரெட்மி 6 (3 ஜிபி) விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,410) என்றும், 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) என்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை 599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.6,307) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.