Xiaomi யின் Weibo யில் டீசர்,புதிய Mi Mix சாதனம், இருக்கலாம் Mi Mix 4…!
சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
Xiaomi சீனாவில் சோசியல் மீடியா Weibo தளத்தில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் Mi Mix சீரிஸ் யின் புதிய எடிசனின் வேலை செய்து வருகிறது. இதனுடன் இந்த புகைப்படத்தில் மூன்று போன்களை பார்க்க முடிகிறது. அதி கிட்டத்தட்ட பாக்க ஒரிஜினலாக Mi Mix, Mi Mix 2 மற்றும் Mi Mix 3 போல இருக்கிறது.
இந்நிலையில், சியோமி தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசரை தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் 4 என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
முன்னதாக சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போன் 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக கான்செப்ட் வடிவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் டிரை-பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் செராமிக் பேனல் வழங்கப்பட்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் நவம்பர் 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், Mi மிக்ஸ் 3எஸ் மற்றும் Mi 4 பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.
முந்தைய வழக்கப்படி சியோமி தனது Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெய்போவில் வெளியாகி இருக்கும் டீசரை பார்க்கும் போது புதிய சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.
புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அதிகளவு மாற்றங்களுடன் ஸ்கிரீன் அளவு முந்தைய Mi மிக்ஸ் 3 மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் பின்புறம் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு அதன் Mi Mix 3 5G சாதனத்தை அறிமுகம் செய்தது. அதில் ஸ்னாப்ட்ரகன் 845 உடன் அறிமுகம் செய்தது. அதுவே 5G வகையில் ஸ்னாப்ட்ரகன் 855 SoC மற்றும் X50 5G மீடின் உடன் வருகிறது. ஸ்டாண்டர்ட் Mi Mix 3 யில் 3200mAh பேட்டரி இருக்கிறது அதுவே அதன் புதிய 5G வகையில் 3800mAh யின் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile