சியோமி, அதன் எம்ஐ 4ஐ-இல் இருக்கும் வெப்ப பிரச்சினைகளை சரி காட்டும் விதமாக ஓடிஏ(கம்பியில்லா முறையில் மென்பொருள் பகிர்வு) மேம்பாடு வெளியிடுகிறது

Updated on 28-May-2015
HIGHLIGHTS

சியோமி தற்போது, எம்ஐ 4ஐ-க்கான ஓடிஏ மேம்பாடு ஒன்றை வெளியிட இருக்கிறது. இது கருவியின் வெப்ப சிக்கல்களை தீர்க்கும் என சியோமி கூறுகிறது.

நாங்கள் அண்மையில் சியோமி எம்ஐ 4ஐ குறித்து ஆய்வு செய்தோம். அதன் மிகப்பெரிய குறைப்பாடாக நாங்கள் உணர்ந்தது, வெப்ப பிரச்சனைகளால், கைப்பேசியால் சீரான செயல்திறனை அளிக்க இயலவில்லை என்பதாகும். எனவே இதற்கு தேர்வு அளிக்கும் விதமாக சியோமி ஒரு ஓடிஏ மேம்பாடை வெளியிட்டுள்ளது. வெப்ப சிக்கலை தீர்க்கும் இந்த அண்மைய, எம்ஐயூஐ 6.5.5.0பதிப்பு எல்எக்ஸ்ஐஎம்ஐசிடி மேம்பாடு, ஒரு சில உபயோகிப்பளர்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கிறது. மெதுவாக அனைத்து உபயோகிப்பளர்களுக்கும் கிடைக்கும்.

வெப்ப சிக்கலுக்கான தீர்வாக இந்த சீன நிறுவனம், 6.5.4.0பதிப்பு எல்எக்ஸ்ஐஎம்ஐசிடி மேம்பாடை, இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. ஆனால் இந்த மேம்பாட்டிற்கு பிறகு உபயோகிப்பாளர்கள், ஆற்றல் விசையை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்தித்ததால், இந்த வெளியீடு அத்துடன் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த இரண்டு நாட்களில், சியோமி ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது. வரவிருக்கும் மேம்பாடு குறித்து, சியோமி குளோபல்-இன் துணை தலைவர், அவர் பேஸ்புக் பக்கத்தில் கீழ்கண்டவாறு பகிர்ந்துள்ளார்: 

"ஒரு சில எம்ஐ 4ஐ உபயோகிப்பாளர்கள் வாயிலாக நாங்கள் கேள்விப்பட செய்தியின் படி, கருவி அதிக ஆற்றல் உறிஞ்சும், சிக்கலான 3டி விளையாட்டுகள்-ஐ நீண்ட நேரம் விளையாடும் போது, வெப்பமடைவதாக தெரிகிறது. இது போன்ற கவலைகளை தீர்க்கும் விதமாக எங்களுடைய வெப்ப கட்டுப்பாடு படிமுறைகளை, வெப்பநிலையை சிறப்பாக கட்டுபடுத்த உகந்தவாறு மாற்றியுள்ளோம். இந்த புதிய வெப்ப கட்டுப்பாடுகள், சிப் அமைப்பின் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு, அலைவரிசை, மின்வலி அளவு மற்றும் உள்ளக எண்ணிக்கை ஆகியவற்றை மாற்றியமைக்கிறது. 

எங்களுடைய அனைத்து உள் சோதனைகள் மற்றும் ஓடிஏ வெளியீடுக்கு முன்பான எம்ஐயூஐ ஃபோரம், பீட்டா பரிசோதகர்களுக்கான வெளியீட்டிலும், நாங்கள் கவனித்தது என்னவென்றால், இந்த மேம்பாட்டில் உள்ள மாற்றங்கள் கருவியின் ஒட்டுமொத்த தட்பவெப்ப நிலையை, செயல்திறனுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தாமல் குறைக்கிறது. இது உண்மையில் மனதுக்கு குளிர்வானதாக இருக்கிறது!(இந்த சிலேடை பேச்சை மன்னியுங்கள்). அனைவரும் இந்த மேம்பாடை இந்த வாரத்தில் பெற இயலும். “

சியோமி எம்ஐ 4ஐ பலவேறு அம்சங்களில் ஒரு நல்ல ஸ்மார்ட் கைப்பேசி ஆகும். ஆனால் அதிக வெப்பமடையும் ஒரு சிக்கலின் காரணமாக அதன் செயல்திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. இது சொன்னாலும் கூட, இதே விலைப் பிரிவில் உள்ள ஏனைய கைப்பேசிகளைக் காட்டிலும் சியோமி எம்ஐ 4ஐ  சிறந்த காட்சித்திரை மற்றும் கேமராவை கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்நாப்டிராகன் 615 ஆற்றல் கொண்டு செயல்படும் இந்த கருவி, எந்த பதிவும் இல்லாமல், ஃபிளிப்கார்ட் உடைய தற்போதைய மின்னணு சாதனங்களுக்கான விற்பனையில் கிடைக்கிறது. 

Hardik Singh

Light at the top, this odd looking creature lives under the heavy medication of video games.

Connect On :