சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் ரெட்மி 5 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்த நிலையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை சியோமி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி ரெட்மி எஸ்2 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சீனா மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து XDA டெவலப்பர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 720×1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி சோனி IMX486 சென்சார், 5 எம்பி இரண்டாவது கேமரா சாம்சங் S5K5E8 செனசார், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், போர்டிரெயிட் மோட், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 3080 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. பிளாக் ஷார்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் லிக்விட் கூலிங் சிஸ்டம், பிர்தேயக பட்டன், கழற்றக்கூடிய கேம்பேட், கூடுதல் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய சியோமி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU கொண்டிருக்கிறது.