சியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் மே 10-ம் தேதி சீனாவில் வெளியிடப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் அலிஎக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் வெளியாகலாம் என்ற தகவல்கள் தெரியவந்துள்ளது.
இத்துடன் சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சியோமி வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ டீசரில் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட் மோட் மற்றும் ஏஐ (AI) பியூட்டி மோட்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது.
Xiaomi redmi 2 இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி பேசினால் அதில்
– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், PDAF, EIS
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி
இதன் சொபிட்வர் பற்றி பேசினால் இந்த சாதனத்தில் MIUI 9.5 இன்டெர்பெஸ் உடன் ஆண்ட்ராய்ட் ஓரியோவில் வேலை செய்யும் இந்த சாதனம் iPhone X போன்ற கெஸ்ஜர் சப்போர்ட் இருக்கும் சீன வலைவெப்சைட்டில் த்தளத்தில் சியோமி ரெட்மி எஸ்2 பேஸ் வெர்ஷன் விலை 165.99 முதல் 193.99 டாலர்கள் அதாவது 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.9,480) முதல் துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.