48MP கேமரா மற்றும் ஸ்னாப்ட்ரகன் 660Soc உடன் Xiaomi Redmi Note 7 அறிமுகம்..!

Updated on 10-Jan-2019
HIGHLIGHTS

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 48 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

Xiaomi இன்று சீனாவில்  நடந்த  விழாவில்  ரெட்மி நோட் 5 டப்  செய்தது போலவே Redmi Note 7.அறிமுகம் செய்துள்ளது. இந்த Redmi Note 7 அசத்தலான  அம்சங்களுடன் வருகிறது, Honor வியூவ் 10க்கு பிறகு இது தான் இரண்டாவது போன் 48MP  கேமராவுடன் வருவது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் பின் கேமரா அசத்தலான க்ளாஸ் டிசைன்  மற்றும் ஆண்ட்ராய்டு 9பை மற்றும்  MIUI 10  கொடுக்கப்பட்டியுள்ளது  ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD . பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார் f/1.8, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா AI . அம்சங்கள் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD  பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– க்விக் சார்ஜ் 4

விலை 
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,390), 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,460), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :